பேங்காக்: தாய்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டில் அந்நாட்டுக்கு 11.2 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் சென்றனர். இவ்வாண்டு 25 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்க தாய்லாந்து இலக்கு கொண்டுள்ளது.
இவ்வாண்டில் மட்டும் ஏழு முதல் பத்து மில்லியன் சீனப் பயணிகள் தாய்லாந்துக்குச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

