விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

1 mins read
f226a5cf-e390-443e-872f-b6596f4b7460
-

குத்துச்சண்டை: ஓய்வுபெறும் முடிவை மாற்றிக்கொண்ட தனிஷா

சிங்கப்பூர்: இவ்வாண்டு கம்போடியாவில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பெண்களின் 50 கிலோ எடைக்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டைப் போட்டி இடம்பெறாது. இதனால் விரக்தி அடைந்த சிங்கப்பூர் வீராங்கனை தனிஷா மதியழகன் (படம்) போட்டிகளிலிருந்து ஓய்வுபெற இருப்பதாக முடிவெடுத்தார். ஆனால் தற்போது அவரது பயிற்றுவிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 25 வயது தனிஷா தமது முடிவை மாற்றிக்கொண்டார்.

இந்தியா, மொரோக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் களமிறங்க இருக்கிறார்.

ஸ்பர்சிடம் ஃபுல்ஹம் தோல்வி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஃபுல்ஹம் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் தோற்கடித்தது.

ஸ்பர்சின் வெற்றி கோலை ஹேரி கேன் போட்டார். ஸ்பர்சுக்காக கேன் 266 கோல்கள் போட்டுள்ளார். இதன்மூலம் ஸ்பர்ஸ் குழுவுக்காக ஆக அதிக கோல்களைப் போட்ட ஜிம்மி கிரீவ்சின் சாதனையை கேன் ஈடுசெய்துள்ளார்.

இடைவேளைக்குச் சில நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து கேன் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.