தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புருணைக்குப் பயணம் மேற்கொண்ட அன்வார்

1 mins read
f89c0c90-ab7c-4bab-8252-868c4475da16
-

பண்­டார் ஸ்ரீ பக­வான்: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் புரு­ணைக்கு இரண்டு நாள்­கள் அதி­கா­ரத்துவப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். நேற்று அவர் புருணை சென்­ற­டைந்­தார். கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் மலே­சி­யப் பிர­த­மராகப் பதவி ஏற்ற பிறகு இது திரு அன்வார் மேற்கொள்ளும் இரண்­டா­வது அதி­கா­ரத்­துவ வெளி­நாட்­டுப் பய­ண­மா­கும். திரு அன்­வா­ரு­டன் அவ­ரது மனைவி டாக்­டர் வான் அசிசா வான் இஸ்­மா­யி­லும் புருணை சென்­றுள்­ளார். திரு அன்­வா­ரும் அவ­ரது மனை­வி­யும் சென்ற விமா­னம் நேற்று பிற்­ப­கல் 3.13 மணிக்கு புருணை அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­யது.

அவர்­களை பட்­டத்து இள­வ­ர­சர் அல் முஹ்­தாடீ பில்லா சுல்­தான் ஹச­னல் போல்­கி­யா­வும் அவ­ரது மனை­வி­யான இள­வ­ர­சி­யார் சாரா­வும் வர­வேற்­ற­னர்.

திரு அன்­வா­ருக்கு விமான நிலை­யத்தில் சடங்குபூர்வ

வர­வேற்பு வழங்­கப்­பட்­டது.

புருணை மன்­னர் ஹச­னல் போல்கி­யாவை திரு அன்­வார் இன்று சந்­திப்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதை­

அடுத்து, மலே­சியா-புருணை இரு­த­ரப்பு நல்­லு­றவுக் கூட்­டத்­தில் திரு அன்­வார் கலந்­து­கொள்ள இருக்­கி­றார். மலே­சிய முத­லீட்டு மேம்­பாட்டு ஆணை­யத்­து­டன் புருணை முத­லீட்டு ஆணை­யம் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்

­பட்­டது.