நியூசிலாந்துப் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி ஏற்பு

ஆக்­லாந்து: நியூ­சி­லாந்­தின் புதிய பிர­த­ம­ராக கிறிஸ் ஹிப்­கின்ஸ் நேற்று பதவி ஏற்­றார். அண்­மை­யில் திரு­வாட்டி ஜெசின்டா ஆர்­டன் எதிர்­பா­ராத வித­மாக அப்­

ப­த­வி­யி­லி­ருந்து வில­கி­னார்.

திரு ஹிப்­கின்­சுக்­குப் பிர­த­மர் லீ சியன் லூங் தமது வாழ்த்­து­

க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார். நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் பத­வி­யி­

லி­ருந்து விலக திரு­வாட்டி ஆர்­டன் எடுத்த முடிவு வருத்­த­மளித்தபோ­தி­லும் அவர் அவ்­வாறு செய்­த­தற்­கான கார­ணங்­கள் தமக்­குப் புரி­வ­தாக திரு லீ தெரி­வித்­தார்.

திரு­வாட்டி ஆர்­டன் தாம் பதவி வில­கப்­போ­வ­தாக அறி­வித்­த­போது அதற்­கான கார­ணத்தை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்­த­தா­க­வும் அதைப் பார்த்து தாம் மனம் நெகிழ்ந்­த­தா­க­வும் திரு லீ கூறி­னார். பொறுப்­பு­களை இன்­னொ­ரு­வ­ரி­டம் ஒப்­ப­டைத்­து­விட்டு, நல்ல ஓய்­வுக்­குப் பிறகு மீண்­டும் புத்­து­ணர்ச்சி பெற்று, பொது வாழ்­வில் வேறு வகை­களில் திரு­வாட்டி ஆர்­டன் பங்­க­ளிக்க வேண்­டும் எனத் திரு லீ விருப்­பம் தெரி­வித்­தார்.

திரு­வாட்டி ஆர்­டன் அள­வுக்கு திரு ஹிப்­கின்ஸ் பிர­ப­ல­மா­ன­வர் அல்ல. இருப்­பி­னும், அவ­ரது அர­சி­யல் ஆற்­றல் பற்றி அந்­நாட்­டி­னர் நன்கு அறி­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து திரு­வாட்டி ஆர்­டன் வில­கி­விட்­ட­போ­தி­லும் அவ­ருக்­குத் தொடர்ந்து பாது­காப்பு வழங்­கப்­ப­டக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது. அவர் பிர­த­ம­ராக இருந்­த­போது அவ­ருக்கு விடுக்­கப்­பட்ட மிரட்­டல்­களே இதற்கு கார­ணம். திரு­வாட்டி ஆர்டனுக்கு எதி­ராக இணை­யம் மூலம் மிக மோச­மான விமர்­ச­னங்­கள் வைக்­கப்­பட்­ட­தா­க­வும் மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் ஆக்­லாந்து பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!