கியவ்: உக்ரேனின் கிழக்குப்
பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியின் சொலேடார் நகரி
லிருந்து தனது படைகள் பின்வாங்கியிருப்பதாக ஏஎஃப்பி நிறுவனத்திடம் உக்ரேன் ஒப்புக்கொண்டுள்ளது.
போர் காரணமாக சொலேடார் நகரத்துக்குப் படுமோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொலேடார் நகரைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யப் படைகள் இம்மாத தொடக்கத்தில் கூறின.
இந்நிலையில், ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரேனியர் களின் நிலை மோசமடைந்துள்ளது. புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்
கூடிய நோய்களால் அவதியுறுவோருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக உக்ரேனில் உள்ள பல இடங்களில் மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உக்ரேனுக்கு கவச வாகனங்களை வழங்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
அவ்வாறு நேர்ந்தால் அது ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நேரடி நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளப்பபடும் என ரஷ்யா கண்டனம் தெரிவித்
துள்ளது.

