பேங்காக்: தாய்லாந்து தலைநகரம் பேங்காக்கில் காற்று மாசு பிரச்சினை மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கூடுமான வரையில் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பேங்காக்வாசிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பேங்காக்கில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியே செல்ல தேவை ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று பேங்காக் மக்களிடம் வலியுறுத்தப்
பட்டது.
அதுமட்டுமல்லாது, சொந்த வாகனங்களில் பயணம் செய்யாமல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி அவர்கள்
ஊக்குவிக்கப்படுகின்றனர்.
வெளிப்புறங்களில் பொருள்களை எரிப்பது, கட்டுமானப் பணிகள், லாரிகளிலிருந்து புகை வெளியேற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட இருக்கின்றன.
கடந்த வாரயிறுதியிலிருந்து பேங்காக்கின் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நிலைமை மோசமடையும் என்று அஞ்சப்
படுகிறது. தற்போதைக்குப்
பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

