விழுந்து நொறுங்கிய விமானம்; விமானிகள் இருவர் மரணம்

மணிலா: பிலிப்­பீன்ஸ் ஆகா­யப் படைக்­குச் சொந்­த­மான பயிற்சி விமா­னம் விழுந்து நொறுங்­கி­ய­தில் அதில் இருந்த இரண்டு விமா­னி­கள் மாண்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று காலை தலை­ந­கர் மணி­லா­வுக்கு 133 கிலோ­மீட்­டர் தூரம் மேற்­கில் இருக்­கும் பட்­டான் மாநி­லத்­தின் பிலார் நக­ரில் நிகழ்ந்­தது.

விபத்­தில் பொது­மக்­கள் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்று பிலிப்­பீன்ஸ் காவல்­துறை கூறி­யது. காலை 10 மணி அள­வில் விமா­னம் புறப்­பட்­டுச் சென்ற­தா­க­வும் ஏறத்­தாழ 35 நிமி­டங்­கள் கழித்து அது விழுந்து நொறுங்­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. விபத்­துக்­குள்­ளான விமா­னம் எஸ்­எஃப்260 டிபி ரகத்­தைச் சேர்ந்­தது என்று பிலிப்­பீன்ஸ் ஆகா­யப் படை கூறி­யது.

அவ்­வகை விமா­னங்­களை பலமுறை பயன்­ப­டுத்தி இருப்­ப­தா­க­வும் குறிப்­பாக, 2017ஆம் ஆண்­டு மராவி நக­ரைக் கைப்­பற்­றிய பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக நடந்த சண்­டை­யில் அவை பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்து தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தால் பிலிப்­பீன்ஸ் ஆகா­யப் படை­யி­டம் இருக்­கும் அவ்­வகை விமா­னங்­கள் தற்­போ­தைக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டாது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!