போதைப்பொருள் கலந்த பானம்; மலாக்கா தம்பதியர் கைது

மலாக்கா: மலே­சி­யா­வின் மலாக்கா மாநி­லத்­தில் போதைப்­பொ­ருள் கலந்த குளிர்­பா­னங்­களை விற்­பனை செய்த குற்­றத்­துக்­காக ஒரு தம்­ப­தி­யரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

ஒரு போத்­த­லுக்கு 300 ரிங்­கிட் (S$92) என அந்­தக் குளிர்­பா­னங்­களை அவர்­கள் விற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மேலும், ஆரோக்­கிய பானங்­கள் என்று கூறி போதைப்­

பொ­ருள் கலந்த பானங்­களை அவர்­கள் 150 ரிங்­கிட்­டுக்கு விற்­ற­தாக மலாக்கா காவல்­துறை தெரி­வித்­தது.

கைது செய்­யப்­பட்ட 34 வயது ஆட­வ­ரின் 28 வயது மனைவி வெளி­நாட்­டைச் சேர்ந்­த­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இரு­வ­ரை­யும் வெவ்­வேறு இடங்­களில் காவல்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூர், ஜோகூர் பாரு ஆகி­ய­வற்­றில் உள்ள கடத்­தல் கும்­பல்­

க­ளி­ட­மி­ருந்து இத்­தம்­ப­தி­யர் பெரு­ம­ள­வி­லான போதைப்­

பொ­ருளை வாங்­கி­ய­தாக விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. 3,600க்கும் அதி­க­மான குளிர்­பா­னங்­க­ளைத் தயா­ரிக்­கத் தேவை­யான போதைப்­பொ­ருளை அவர்­கள் வைத்­தி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்தத் தம்­ப­தி­யர் போதைப்­பொ­ருள் உட்­கொள்­ள­வில்லை என்று சீறு­நீர் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!