ஐபிஎம் 3,900 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும்

ஐபிஎம் 3,900 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும்

1 mins read
75add277-4ad1-4a14-a244-56586db75514
-

சான் ஃபிரான்­சிஸ்கோ: ஐபி­எம் நிறு­வ­னம் அதன் உல­க­ளா­விய ஊழி­யர் அணி­யில் 1.5 விழுக்­காட்­டைக் குறைக்­கப் போவ­தா­கக் கூறி­யுள்­ளது.

கடந்த சில மாதங்­க­ளாக பல்­வேறு தொழில்­நுட்­பப் பெரு நிறு­வ­னங்­கள் ஆட்­கு­றைப்பு செய்து வரு­வதை அடுத்து ஐபி­எம் நிறு­வ­ன­மும் அவ்­வாறு அறி­வித்­துள்­ளது.

ஏறத்­தாழ 3,900 ஊழி­யர்­கள் வேலை­நீக்­கம் செய்­யப்படு­வர் என்று நிறு­வ­னத்­தின் தலைமை நிதி நிர்­வாகி ஜேம்ஸ் காவ­னாவ் நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

அந்­ந­ட­வ­டிக்­கைக்கு சுமார் 300 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$394 மி.) செல­வா­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் ஜெர்­ ம­னி­யைச் சேர்ந்த எஸ் அண்ட் பி (S&P) மென்­பொ­ருள் பெரு­நி­று­வ­னம் சுமார் 3,000 ஊழி­யர்­களை ஆட்­கு­றைப்பு செய்­ய­வுள்­ளது. தனது ஊழி­ய­ர­ணி­யில் 2.5 விழுக்­காட்­டி­னர் அத­னால் பாதிக்கப்­ப­டு­வர் என்று எஸ்அண்ட்பி கூறி­யது.

அந்­நி­று­வ­னத்­தில் தற்­போது உல­கம் எங்­கும் 12,000 ஊழி­யர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.