சிங்கப்பூர் வருவோரால் ஜோகூர் பாருவில் அவதி

சிங்கப்பூர் வருவோரால் ஜோகூர் பாருவில் அவதி

1 mins read
aa305889-6029-4240-a311-af60e84ef040
-

ஜோகூர் பாரு: ஜொகூ­ரி­லி­ருந்து வேலைக்­காக சிங்­கப்­பூர் வரும் மோட்­டார் சைக்­கிள் ஓட்­டி­கள் குடி­நு­ழை­வுச் சாவடி அரு­கி­லுள்ள இடத்­தில் தங்­கள் கார்­க­ளை­யும் மோட்­டார்­சைக்­கிள்­க­ளை­யும் நிறுத்­தி­வைத்து விட்­டுச் செல்­வ­தால் அப்­ப­குதி மக்­க­ளுக்கு சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது.

கிம் டெங் பார்க்­கில் உள்ள ஜாலான் ஸ்டோரி, பாங்­கு­னான் சுல்­தான் இஸ்­கந்­த­ரில் உள்ள சுங்க, குடி­ நு­ழை­வுச் சாவ­டி­யி­லி­ருந்து நடக்­கும் தூரத்­தில் உள்­ளது.

அத­னால் பலர் தங்­கள் வாக­னங்­களை நிறுத்­தி­விட்டு சிங்­கப்­பூர் வரு­கின்­ற­னர்.

அந்த வாக­னங்­கள் மணிக் கணக்­கா­க­வும் சில நேரங்­களில் நாள்­க­ணக்­கா­க­வும் வீடு­கள், கடை­கள் ஆகி­ய­வற்­றின் முன்­ நிற்­கின்­றன. அப் ­ப­கு­தி­வா­சி­கள், கடைக்­கா­ரர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் தங்­கள் வாக­னங்­களை நிறுத்த முடி­யா­மல் சிர­மப்­ப­டு­கின்­ற­னர். வாக­னங்­கள் நிறுத்­தப்­ப­டு­வ­தைத் தடுக்க சிலர், வீட்டின் முன்னால் குப்பைத் தொட்டிகளை வைக்கின்றனர்.

அந்த வாக­னங்­களை இழுத்­துச் செல்­லும்­படி அல்­லது அப­ரா­தம் விதிக்­கும்­படி ஜோகூர் பாரு நக­ர­மன்­றத்தை அப்­ப­கு­தி­மக்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.