ஆஸ்திரேலிய தேசிய தினத்தில் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலிய தேசிய தினத்தில் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்டம்

1 mins read
c30a59e1-e488-4e5c-ba9e-9ffb6551e3d4
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லிய தேசிய தினத்­தன்று ஆயி­ரக்கணக்­கா­ன­வர்­கள் அந்­நாட்டு பழங்­குடி மக்­க­ளுக்கு ஆத­ர­வா­கப் பேர­ணி­களை நடத்­தி­யுள்­ள­னர். பிரிட்­டிஷ் கப்­பல்­கள் சிட்னி துறை­மு­கத்­துக்­குள் நுழைந்த ஜன­வரி 26ஆம் தேதி ஆஸ்­தி­ரே­லிய தின­மா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது. ஆனால் அது தாக்­கு­தல் தின­மா­கக் கருதப்பட வேண்­டும் என்று பல ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கூறி வரு­கின்­ற­னர்.

சிட்னி, பிரிஸ்­பன், அடி­லேட் உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­களில் பல்­லா­யி­ரம் பேர் திரண்­ட­னர். கறுப்பு, சிவப்பு நிறத்­தில் மஞ்­சள் வட்­டம் பொறிக்­கப்­பட்ட ஆஸ்­தி­ரே­லிய பழங்­குடி மக்­க­ளின் கொடி­க­ளைத் தாங்­கி, அவர்­களின் பாரம்­ பரியச் சடங்­கு­களை நடத்­தி­னர்.

தலை­ந­கர் கேன்­ப­ரா­வில் நடை­பெற்ற கொடி­யேற்ற நிகழ்ச்­சி­யில் நேற்று பேசிய ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னீஸ், அந்­நி­லத்­தில் குறைந்­தது 65,000 ஆண்­டு­க­ளாக வாழ்ந்துவரும் பூர்­வீக மக்­களை கௌர­வித்­தார்.

"உல­கின் தொடர்ச்­சி­யான ஆகப் பழைய பண்­பாட்­டு­டன் இந்­தக் கண்­டத்­தில் நாம் ஒன்­றாக இருக்­கி­றோம் என்ற தனிச்­சி­றப்பு நமக்கு உள்­ளது," என்­றார் திரு அல்­ப­னீஸ்.

பழங்­குடி மக்­க­ளுக்கு இது சிர­ம­மான நாள் என்­பதை உணர்ந்­த­போ­தும், ஆஸ்­தி­ரே­லிய தினத்தை வேறு நாளுக்கு மாற்­றத் திட்­ட­மில்லை என்று அவர் கூறி­னார். ஆஸ்திரேலியாவின் சுமார் 880,000 பழங்குடி மக்கள் சமூக, பொருளியல் ரீதியாகப் பின்தங்கியுள்ளனர்.