உக்ரேன்மீது விமானத் தாக்குதல்

1 mins read
776d814d-f776-4c5c-9664-0288751a7cb7
-

கியவ்: அமெ­ரிக்­கா­வும் ஜெர்­ம­னி­யும் டாங்­கு­களை அனுப்பி உக்­ரே­னுக்கு உதவ இணங்­கிய மறு­நாள் ரஷ்யா உக்­ரேன்­மீது விமா­னத் தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளது.

நேற்று காலை உச்­சநேரக் போக்­கு­வ­ரத்­தின்­போது ரஷ்யா அதன் போர் விமா­னங்­களை அனுப்பி உக்ரேனைத் தாக்­கி­யது.

தலை­ந­கர் கியவ்­வில் குறைந்­தது ஒரு­வர் கொல்­லப்­பட்­டார். விமா­னத் தாக்­கு­தல் நடை­பெ­றும் என்ற எச்­ச­ரிக்­கைச் சங்கு ஒலித்­ததும் கியவ்வின் ரயில் நிலை­யங்­களில் பலர் பாது­காப்­பான இடங்­க­ளைத் தேடி மறைந்­து­கொண்­ட­னர். அங்குள்ள மின்­சாரக் கட்­ட­மைப்பை ரஷ்­யப் போர்­வி­மா­னங்­கள் தாக்­கின. அதைத் தொடர்ந்து பல இடங்­களில் மின்­வெட்டு ஏற்­பட்­டது.

தாக்­கு­த­லில் கருங்­க­டல் வட்­டா­ரத்­தில் உள்ள ஒடெ­சா­வில் இரண்டு முக்­கிய மின்­சார நிலை­யங்­களும் சேத­ம­டைந்­தன. யுனெஸ்கோ எனப்­படும் ஐக்­கிய நாட்டு கல்வி, சமூக, கலா­சார, கல்வி அமைப்பு நேற்­று­முன்­தி­னம் ­ஒ­டெ­சாவை ஆபத்­தில் உள்ள மர­பு­டைமை நக­ராக அறி­வித்­தது.

ரஷ்யா, கப்­பல் வழி­யா­க­வும் விமா­னம் வழி­யா­க­வும் உக்­ரேன் மீது நேற்று 55 ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­ய­தா­க­வும் அவற்­றில் 47 ஏவு­க­ணை­க­ளைச் சுட்­டு­வீழ்த்­தி­ய­தாகவும் உக்­ரே­னிய ராணுவ அதி­கா­ரி­கள் கூறி­னர்.

உக்­ரே­னுக்கு 30 டாங்­கு­களை அனுப்­பப்போவ­தாக அமெ­ரிக்­கா­வும் 14 டாங்­கு­களை அனுப்­பப்­போ­வ­தா­க­ ஜெர்­ம­னி­யும் நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தன.

டாங்­கு­களை விரை­வாக அனுப்­பும்­படி அந்­நா­டு­க­ளைக் கேட்­டுக்­கொண்ட உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி, போர்விமானங்­களும் நீண்­ட­தொ­லைவு ஏவு­க­ணை­களும் தேவை என்­றார். அமெ­ரிக்­கா­வும் ஜெர்­ம­னி­யும் டாங்­கு­களை அனுப்பி போரில் நேர­டி­யா­கத் தலை­யி­டு­வதாக ரஷ்யா அதை எதிர்த்­தது.