கோப்பன்ஹேகன்: டென்மார்க் அந்நாட்டுப் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவையைத் திட்டமிட்டு வருகிறது. பெண்கள் தற்போது டென்மார்க் ராணுவத்தில் விருப்பத்தின்பேரில் சேரலாம். ஆண்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
பெண்கள் சேர்ந்தால் ராணுவத்துக்கு நன்மை என்று டென்மார்க்கின் தற்காப்பு அமைச்சரும் துணைப் பிரதமருமான ஜேக்கப் எல்லமென் ஜென்சன் கூறினார். மகளிர் அமைப்புகளும் அத்திட்டத்தை ஆதரித்துள்ளன.
நேட்டோ உறுப்புநாடாக இருக்க டென்மார்க் தனது ராணுவத்தைப் பெருக்கவேண்டும். ஆனால் அது தனது ராணுவத்திலும் கடற்படையிலும் போதுமான அளவில் முதலீடு செய்யவில்லை என்று அறிக்கை ஒன்று கூறியது.

