மியன்மாரில் கஞ்சா செடி வளர்ப்பு பெரிதும் கூடியுள்ளது: ஐநா

யங்கூன்: ராணுவ ஆட்சியின்கீழ் மியன்மாரில் கஞ்சா செடி வளர்ப்பு சென்ற ஆண்டு 33 விழுக்காடு அதிகரித்துள்ளது. போதை மருந்து, குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாட்டு அமைப்பின் அலுவலகம் நேற்று அத்தகவலைத் தெரிவித்தது.

முந்தைய ஆறு ஆண்டுகளில் கஞ்சா செடி வளர்ப்பு குறைந்து வந்ததாகவும் ராணுவ ஆட்சியில் மியன்மாரில் ஏற்பட்ட சமூக, பொருளியல் குழப்பம் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என்றும் அலுவலகம் கூறியது.

மியன்மாரில் கடந்தாண்டு கஞ்சா வளர்க்கப்பட்ட நிலம், மூன்றில் ஒரு பங்கு கூடி, 40,100 ஹெக்டெர் ஆனது. கஞ்சா விளைச்சல் ஒரு ஹெக்டருக்கு 41 விழுக்காடு கூடி, சுமார் 20 கிலோகிராம் ஆனது. 2002லிருந்து இதுவே ஆக அதிக விளைச்சல் என்று அலுவலகம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!