'வீடமைப்பு குறித்து சிங்கப்பூரிடமிருந்து ஆலோசனை பெற வெட்கப்படத் தேவையில்லை'

'வீடமைப்பு குறித்து சிங்கப்பூரிடமிருந்து ஆலோசனை பெற வெட்கப்படத் தேவையில்லை'

2 mins read
a671aa74-8808-4de8-86dc-1bc24c2c7bfb
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் பொது வீட­மைப்­புத் திட்­டங்­களை மேம்­ப­டுத்த அது­கு­றித்து சிங்­கப்­பூ­ரி­ட­மி­ருந்து ஆலோ­ச­னை­க­ளைப் பெற வெட்­கப்­ப­டத் தேவை­யில்லை என்று மலே­சிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

அர­சி­யல் ஆதா­யத்தை ஒரு பக்­கம் ஒதுக்­கி­விட்டு மக்­கள் நல­னுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும்­படி ஜோகூ­ரின் தெப்­ராவ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜிம்மி புவா வீ சீ கேட்­டுக்­கொண்­டார்.

மலே­சி­யா­வில் ஆண்­டு­தோ­றும் வீட்டு விலை அதி­க­ரித்து வரு­வ­தால் வீடு வாங்க மலே­சி­யர்­கள் சிர­மப்­ப­டு­வதை அவர் சுட்­டி­னார்.

அது­மட்­டு­மல்­லாது, மலே­சி­யா­வில் குறிப்­பாக முக்­கிய நக­ரங்­களில் கட்­டுப்­ப­டி­யான விலை­யிலான வீடு­கள் போது­மான அள­வில் இல்­லா­தது கவலை அளிப்­ப­தாக திரு புவா கூறி­னார்.

"வீட்டு உரிமை விவ­கா­ரம் குறித்து மலே­சி­யர்­கள் எதிர்­நோக்­கும் பிரிச்­சி­னைக்­குத் தீர்வு காண மலே­சிய அர­சாங்­கம் முயன்று வரு­கிறது. அது­கு­றித்து அது சரி­யான பாதை­யில் சென்­று­கொண்­டி­ருக்­கிறது," என்­று திரு புவா நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் உட்­பட மற்ற நாடு­க­ளி­ட­மி­ருந்து வீட­மைப்பு தொடர்­பாக ஆலோ­ச­னை­க­ளைப் பெற அந்­நாட்­டில் உள்ள வீட­மைப்பு நிபு­ணர்­களை மலே­சிய அர­சாங்­கம் நாடி­யி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். மலே­சி­யா­வில் நில­வும் வீட­மைப்பு பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண பிற நாடு­கள் கடைப்­பி­டிக்­கும் அணு­கு­மு­றை­கள் ஆரா­யப்­படும் என்று இம்­மா­தம் 17ஆம் தேதி­யன்று மலே­சி­யா­வின் உள்­ளூர் அர­சாங்க மேம்­பாட்டு அமைச்­சர் ஙா கோர் மிங் தெரி­வித்­தி­ருந்­தார்.

கட்­டுப்­ப­டி­யான விலை­யில் உள்ள வீடு­க­ளைக் கட்­டு­வ­தில் தங்­க­ளுக்கு இருக்­கும் அனு­ப­வங்­க­ளை­யும் ஆற்­ற­லை­யும் மலே­சி­யா­வி­டம் பகி­ர்ந்­து­கொள்ள சிங்­கப்­பூ­ரின் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தைச் சேர்ந்த ஒப்­பந்­த­

தா­ரர்­கள் பிப்­ர­வரி மாதம் மலே­சி­யா­வுக்­குச் செல்­வ­தாக திரு ஙா கூறி­னார். இதற்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அனு­மதி அளித்­தி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

திரு ஙாவின் இத்­திட்­டத்­தைச் சிலர் வர­வேற்­றுள்­ள­னர். ஆனால், சிலர் அது­கு­றித்து அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யுள்­ள­னர்.

கெடா மாநில முதல்­வர் முகம்­மது சனுசி முகம்­மது நூர் உட்­பட பல அர­சி­யல்­வா­தி­கள் திரு ஙாவின் திட்­டத்தை மிகக் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ள­னர்.

இத்­த­கைய விமர்­ச­னங்­கள் தேவை­யற்­றவை என்று கூறிய திரு புவா, மலேசி­யர்­க­ளுக்­கும் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் வீடு­

க­ளைக் கட்டித் தரு­வ­தில் மலே­சிய அரசு ஊழி­யர்­கள் மிக­வும் சிறப்­பாக செயல்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார். இருப்­பி­னும் மலே­சி­யா­வின் பொது வீட­மைப்­புத் திட்­டத்தை மேம்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரி­டம் ஆலோ­சனை பெறு­வ­தில் தவ­றே­தும் இல்லை என்­றார் அவர். சிங்­கப்­பூ­ரின் பொது வீட­மைப்­புத் திட்­டம் உல­கி­லேயே மிகச் சிறந்த வீட­மைப்பு திட்­டங்­களில் ஒன்­றா­கும் என்­றார் அவர்.