மடகாஸ்கரில் புயல்; 16 பேர் உயிரிழப்பு, 17 பேர் மாயம்

மடகாஸ்கரில் புயல்; 16 பேர் உயிரிழப்பு, 17 பேர் மாயம்

1 mins read
99119b6c-487e-4dc5-ab50-ff924ce4ec5c
-

அன்­ட­ன­நா­ரிவோ: மட­காஸ்­கரை உலுக்­கிய புய­லால் குறைந்­தது 16 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

17 பேரைக் காண­வில்லை என்று அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று புயல் கரை­யைக் கடந்­தது.

புயல் கார­ண­மாக மழை இடை­வி­டாது பெய்­த­தா­க­வும் மட­காஸ்­கர் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். 60,000க்கும் மேற்­பட்­டோர் வீடு­களை இழந்­து­விட்­ட­தாகத் தெரிவிக்கப்பட்டது.