ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்‌ரேல் பதிலடி

ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்‌ரேல் பதிலடி

1 mins read
7d4f1c4a-4480-4507-a79d-7e1414148d99
-

ஜெரு­ச­லம்: காஸா­வி­லி­ருந்து பாலஸ்­தீ­னப் போரா­ளி­கள் நடத்­திய ஏவு­க­ணை­த் தாக்­கு­த­லுக்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் காஸா நகரை இஸ்­ரே­லி­யப் போர் விமா­னங்­கள் தாக்­கின.

அண்­மை­யில் மேற்­குக் கரை­யில் மிக மோச­மான வன்­முறை வெடித்­தது. பெரிய அள­வி­லான தாக்­கு­தலை நடத்த திட்­ட­மிட்ட பயங்­க­ர­வா­தி­க­ளைக் கைது செய்ய அங்கு சென்­ற­தாக இஸ்­‌ரே­லிய ராணு­வம் கூறி­யது.

அப்­போது இஸ்­‌ரே­லிய ராணுவ வீரர்­க­ளுக்­கும் பாலஸ்­தீ­னர்­க­ளுக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது. இதில் ஒன்­பது பாலஸ்­தீ­னர்­கள் மாண்­ட­னர்.