தைப்பூசம்: 500,000 பக்தர்கள் வருவர் என எதிர்பார்ப்பு

தைப்பூசம்: 500,000 பக்தர்கள் வருவர் என எதிர்பார்ப்பு

1 mins read
13458336-cc54-45e3-8513-8781ec221f4f
-

ஈப்போ: கொவிட்-19 கட்­டுப்

பாடு­கள் தளர்த்­தப்­பட்­டு­விட்­ட­தால் இவ்­வாண்டு தைப்­பூ­சத் திரு­நா­ளுக்கு ஏறக்­கு­றைய 500,000 பக்­தர்­கள் வரு­கை­பு­ரி­வர் என எதிர்­பார்க்­கிறது மலே­சி­யா­வின் பேராக் மாநி­லத்­ தலை

­ந­க­ரமான ஈப்­போ­வி­லுள்ள

கல்­லு­மலை அருள்­மிகு சுப்­பிர

மணி­யர் ஆல­யம்.

அடுத்த மாதம் 5ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தைப்­பூ­சத் திரு­நாள் கொண்­டா­டப்­

ப­டு­கிறது.

இத­னை­ய­டுத்து, பக்­தர்­கள் இப்­போதே கோவி­லுக்கு வரத்­தொ­டங்­கி­விட்­ட­தால் இவ்­வாண்டு தைப்­பூ­சத் திரு­நாள் களை­கட்­டும் என நம்­பிக்கை

யுடன் கூறு­கி­றார் ஈப்போ இந்து தேவஸ்­தான பரி­பா­லன சபை­யின் தலை­வர் எம்.

விவே­கா­னந்தா. இம்­முறை கூட்ட நெரி­ச­லைத் தவிர்க்­கும் நோக்­கில், இரு நாள்­க­ளுக்கு முன்­னரே ரத ஊர்­வ­லத்­தைத் தொடங்க கல்­லு­மலை அருள்­மிகு சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­யம் முடி­வு­செய்­துள்­ளது என்று அவர் கூறி­னார். வழக்­க­மாக, ரத ஊர்­வ­லம் தைப்­பூ­சத்­திற்கு முதல்­நாள் இடம்­பெ­றும்.

அதன்­படி, பிப்­ர­வரி 3ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பன்­டோங் ஸ்ரீ மகா மாரி­யம்­மன் கோயி­லில் இருந்து தொடங்­கும் ரத ஊர்­வ­லம் மறு­நாள், அதா­வது தைப்­பூ­சத்­திற்கு முதல்­நாள் பின்­னி­ரவு 1 மணிக்கு கல்­லு­மலை அருள்­மிகு சுப்­பி­ர­ம­ணி­யர் ஆல­யத்­திற்கு வந்­து­சே­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கிட்­டத்­தட்ட ஆயி­ரம் பேர் காவடி எடுப்­பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

30,000 பேருக்கு அன்­ன­தா­னம் வழங்­க­வும் கோவில் நிர்­வா­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது.