இஸ்ரேலில் தாக்குதல்: ‌எழுவர் சுட்டுக்கொலை

இஸ்ரேலில் தாக்குதல்: ‌எழுவர் சுட்டுக்கொலை

1 mins read
69b500a7-020d-48fe-b9ec-7f98ed6faf2b
-

ஜெரு­ச­லம்: கிழக்கு ஜெரு­ச­ல­மில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் ஏழு பேர் கொல்­லப்­பட்­ட­தோடு, மூன்று பேர் காய­ம­டைந்­த­னர்.

நெவ் யாகோவ் நகரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இச்சம்­ப­வம் நடந்தது. அவ­சர அழைப்­பைத் தொடர்ந்து அங்கு சென்ற இஸ்­ரே­லிய காவல்துறை­யி­னர், தப்­பி­யோட முயன்ற துப்­பாக்­கிச் சுடு நடத்­தி­ய­வ­ரைச் சுட்டுக்கொன்­ற­னர்.

மேலும் அவர் 21 வயது இளை­யர் என்­றும் இச்­சம்­ப­வத்­தில் அவர் தனி­யாக செயல்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் கூறி­னர். உள்­ளூர் ஊட­கங்­கள் தாக்­கு­தல் நடத்­தி­ய­வரைக் கிழக்கு ஜெரு­ச­லமைச் சேர்ந்த பாலஸ்­தீ­னி­யர் என அடை­யா­ளம் கண்­டுள்­ளன.

மேலும், இது­தொ­டர்­பான விசா­ர­ணைக்­காக தாக்­கு­தல் நடத்­தி­ய­வ­ரின் குடும்ப உறுப்­பி­னர்­கள், அண்­டை­வீட்­டார் என 42 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­

னர்.

இச்­சம்­ப­வம் குறித்து கருத்து தெரி­வித்த இஸ்­ரே­லிய காவல்­துறைய ஆணை­யா­ளர் கோபி ஷப்­தாய், "அண்­மைய ஆண்­டு­களில் நாங்­கள் சந்­தித்த மிக மோச­மான தாக்­கு­தல்­களில் ஒன்று இது," என்று கூறி­னார்.

பாலஸ்­தீ­னத்­தின் மேற்கு கரை பகு­தி­யில் ஜெனின் அக­தி­கள் முகா­மில் தீவி­ர­வா­தி­கள் இருப்­ப­தா­கக் கூறி, இஸ்­ரேலியப் படை­கள் நடத்­திய சோத­னை­யின்­போது பாலஸ்­தீ­னர்­கள் 9 பேர் கொல்­லப்­பட்­ட­தைத் தொடர்ந்து இஸ்­ரே­லில் இந்­தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.