மலேசியாவின் மூத்த வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் மறைவு

மலேசியாவின் மூத்த வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் மறைவு

1 mins read
779c5fb3-d06c-4a8c-b204-1c1a0be558e9
திரு ஸ்ரீராம் மலேசியாவின் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார் (படம்: இணையம்) -

மலேசியாவின் அரசாங்கத் தரப்பு மூத்த வழக்கறிஞரான கோபால் ஸ்ரீராம் காலமானார். அவருக்கு வயது 79.

தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று நண்பகல் 12 மணியளவில் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு ஸ்ரீராம் மலேசியாவின் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி ஊழல் வழக்கில் முக்கிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராக திரு ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். அதோடு, நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு எதிரான ஊழல் வழக்கிலும் திரு ஸ்ரீராம் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றினார்.