நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கரையில் சேர்த்த முதலை (காணொளி)

நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கரையில் சேர்த்த முதலை (காணொளி)

fallback-0
அந்த ராட்சத முதலை சிறுவனின் உடலை அதன் வாயில் கவ்வியவாறு ஆற்றில் நீந்தி தேடும் பணியில் ஈடுபட்டிருந்த படகு ஒன்றுக்கு அருகே வந்தது. (படம்: Gulf Today)

29 Jan 2023 - 3:17 pm

1 mins read

நீரில் மூழ்கிய சிறுவன் ஒருவனின் சடலத்தை கரையில் சேர்த்துள்ளது முதலை ஒன்று. கேட்பதற்கு அசாதாரணமாக இருந்தாலும் இந்தோனீசியாவின் கலிமந்தான் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மாஹாகம் ஆற்றில் சில நாள்களுக்கு முன் சிறுவன் மூழ்கியதாக நம்பப்படுகிறது. அவனுடைய சடலத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் ராட்சத முதலை ஒன்று சிறுவனின் உடலை அதன் வாயில் கவ்வியவாறு ஆற்றில் நீந்தி வந்துள்ளது. தேடும் பணியில் ஈடுபட்டிருந்த படகு ஒன்றுக்கு அருகே முதலை வந்துள்ளது. முதலையின் முதுகிலிருந்து சிறுவனின் உடலை அதிகாரிகள் மீட்டனர். சிறுவனை ஒப்படைத்துவிட்டு முதலை நீருக்குள் மாயமாக மறைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சடலத்தை சோதனையிட்டதில் முதலை கடித்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று கூறப்பட்டது.

முதலை சிறுவனில் உடலை ஏந்திவரும் காணொளி இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவன் நீரில் எப்படி மூழ்கினான் என்று அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.