பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 41 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 41 பேர் பலி

1 mins read
2ff863fe-80d5-44eb-8209-54f1c3be7b42
மேம்பாலத்தில் மோதிய பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து தீப் பிடித்ததாக கூறப்பட்டது (படம்: ஏஎஃப்பி) -

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 41 பேர் மாண்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேம்பாலத்தில் மோதிய பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து தீப் பிடித்ததாக கூறப்பட்டது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 48 பேரில் 41 மாண்டனர். பயணிகள் குவேட்டா எனும் இடத்திலிருந்து கராச்சிக்கு சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் சாலை விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதும், பல கிராமப்புறங்களில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதும் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம்.

2018ல் பாகிஸ்தானில் 27,000க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் மடிந்ததாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.