தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பினாங்கு தைப்பூசம்: 1.5மி. பேர் வருகையளிப்பர் என்ற எதிர்பார்ப்பு

1 mins read
bd1ac486-746b-4fd8-a007-e929dda2d61f
திருவிழாவில் கலந்துகொள்ள சிங்கப்பூர், மேடான், ஜக்கர்த்தா, லண்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்து பகதர்கள் திரளாக வருகையளிப்பர் என ஆலயம் எதிர்பார்க்கிறது (முன்னைய படம்: இணையம்) -

பினாங்கு தைப்பூச திருவிழாவில் கிட்டத்தட்ட 1.5மில்லியன் பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகையளிப்பர் என்று தண்ணீர்மலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயம் எதிர்பார்க்கிறது. கடந்த ஈராண்டுகளாக கொவிட்-19 தொற்று காரணமாக தைப்பூசம் சிறிய அளவில் நடத்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் திருவிழாவிற்கு வருகையளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தைப்பூசம் வாரயிறுதியில் இடம்பெறுகிறது. இதனால் மலேசியாவில் திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்து. திருவிழாவில் கலந்துகொள்ள சிங்கப்பூர், மேடான், ஜக்கர்த்தா, லண்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்து பகதர்கள் திரளாக வருகையளிப்பர் என ஆலயம் நம்புகிறது.

தைப்பூசத் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற பக்தர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொண்டது.