ஆசியாவை குளிரில் நடுங்கவைத்த ஜனவரி மாதம்

ஆசியாவின் பல பகுதிகள் இம்மாதம் கடும் குளிரில் நடுங்குகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குளிரான வெப்பநிலை நிலவியது. ஆப்கானிஸ்தானில் சில இடங்களில் வெப்பநிலை மைனஸ் 18.3 டிகிரி செல்சியசை தொட்டது. குளிரால் குறைந்தது 162 பேர் இம்மாதம் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

சீனாவில் உள்ள மோஹெ எனும் நகரில் வெப்பநிலை மைனஸ் 53 டிகிரி செல்சியசுக்கு இறங்கியது. வரலாறு காணாத ஆகக் குளிரான வெப்பநிலை இது எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சைபீரியா, ஜப்பான், கொரிய தீபகற்பம் ஆகிய பகுதிகளிலும் பலத்த குளிர் காற்று வீசிவருகிறது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் இந்த வாரம் மட்டும் குளிரால் மூன்று பேர் மாண்டனர். 

ஆசியாவை உறையவைத்துள்ள குளிருக்கு ஆர்டிக் துருவத்தில் ஏற்பட்டுள்ள சுழல்காற்று காரணம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சென்ற மாதம் அமெரிக்காவில் வெப்பநிலை உறையவைக்கும் நிலைக்கு சென்றதற்கும் இந்த சுழல்காற்று காரணம் எனக் கூறப்பட்டது. 

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!