சட்டபூர்வமாக சரியன்று

சட்டபூர்வமாக சரியன்று

1 mins read
d0a45edd-18fd-4119-b9b3-9d8280595a0b
-

அம்னோ நடவடிக்கை குறித்து முன்னாள் பிரதமர் சப்ரி கருத்து

கோலா­லம்­பூர்: அம்னோ கட்­சி­யில் இருந்து பல்­வேறு தலை­வர்­களை நீக்­கி­ய­தும் இடை­நீக்­கம் செய்­தி­ருப்­ப­தும் தவறானது என்று அதன் துணைத் தலை­வரும் முன்­னாள் பிர­த­ம­ரு­மான இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

"சட்­ட­பூர்­வ­மா­கப் பார்க்­கை­யில், அந்த ஒழுங்­கு­முறை நட­வ­டிக்கை சரி­யா­ன­தாக இல்லை. சட்­ட­ரீ­தி­யி­லும் இயற்கை நீதிக் கோட்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­ன­தும் என்­ப­தால் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கும், இடை­நீக்­கம் செய்­யும் முடி­விற்கு நான் எதிர்ப்பு தெரி­வித்­தேன்," என்று இன்ஸ்­ட­கி­ராம் வழி­யாக அவர் கூறி­யுள்­ளார்.

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தற்­காக்­கும் உரிமை வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர்­க­ளது செயல்­க­ளுக்கு விளக்­கம் கேட்டு அவர்­க­ளுக்­குக் கடி­தம் அனுப்­பப்­ப­ட­வில்லை என்­றும் திரு சப்ரி சுட்­டி­னார்.

ஒழுங்­கு­முறை விசா­ர­ணைக் குழு அமைப்­ப­தும் கேள்­விக்­குள்­ளான தலை­வர்­களைத் தற்­காத்­துப் பேச அனு­ம­திப்­ப­துமே சரி­யான நடை­மு­றை­யாக இருக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"குற்­றம் சாட்­டப்­பட்­டோர் தவ­றி­ழைத்­ததை விசா­ர­ணைக் குழு கண்­ட­றிந்­தால், அது தனது பரிந்­து­ரை­களை அம்னோ நிர்­வா­கக் குழு­வி­டம் தாக்­கல் செய்ய வேண்­டும். அதன்­பி­றகு, இறுதி முடிவு தொடர்­பில் கட்சி நிர்­வா­கக் குழு, அம்னோ உச்ச மன்­றத்­தி­டம் தனது பரிந்­து­ரை­களை முன்­வைக்க வேண்­டும்," என்று திரு சப்ரி விளக்­கி­யுள்­ளார்.

குறிப்­பாக, கட்­சித் தலை­வர்­கள்­மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­போது வெளிப்­ப­டைத்­தன்­மை­யின் முக்­கி­யத்­து­வம் குறித்­தும் அவர் நினை­வூட்­டி­னார்.

அம்­னோ­வில் இருந்து முன்­னாள் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நீக்­கப்­பட்­டுள்­ளார்; முன்­னாள் தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தீன் ஆறாண்டுகளுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்டுள்ளார்.