இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மேம்பாலத்திலிருந்து விழுந்து பேருந்து தீப்பற்றி எரிந்ததில், 41 பேர் மாண்டுபோனதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்தன. பலுசிஸ்தான் மாநிலத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது. இதற்கிடையே, தென்னமெரிக்க நாடான பெருவில் நேற்று முன்தினம் மலையிலிருந்து பேருந்து உருண்டு விழ, அதில் பயணம் செய்த 60 பேரில்
24 பேர் உயிரிழந்துவிட்டனர்.

