அம்னோ தலைவர்கள் பலர் பிகேஆர்-இல் இணைவார்கள்

அம்னோ தலைவர்கள் பலர் பிகேஆர்-இல் இணைவார்கள்

2 mins read
c0983949-4f56-454c-b7f4-5403fb60032f
-

"அன்வாரின் கெஅடிலான் (பிகேஆர்) கட்சியில் சேர உறுப்பினர் படிவத்தை வரும் 4ஆம் தேதி சமர்ப்பிக்கிறேன். என்னைப் பின்பற்றி பல அம்னோ தலைவர்கள் பிகேஆர் கட்சியில் சேரவிருக்கின்றனர்," என்று ஸாஹிடி ஸைனூல் அபிடின் கூறியுள்ளார்.

வரும் 4ஆம் தேதி பிகே­ஆர் கட்சி­ யி­டம் உறுப்­பி­னர் படி­வத்தை கொடுக்க முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறி­யுள்ள முன்­னாள் தொடர்பு, பல்­லூ­டக துணை அமைச்­சர் ஸாஹிடி, அம்னோ வைச் சேர்ந்த தேசியத் தலை­வர்­கள் பலர் பிகே­ஆர் கட்­சி­யில் இணைய விரும்­பு­கின்­ற­னர் என்­றார்.

"பாடாங் பெசார் அம்னோ பிரி­வைச் சேர்ந்த 100 பேரு­டன் நான் அதி­கா­ர­பூர்­வ­மாக பிகே­ஆர் கட்­சி­யில் இணை­கி­றேன். பாடாங் பெசா­ரில் உள்ள பல கிளை­களும் விரைவில் கலைக்­கப்­படும்," என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து பெர்­லிஸ் மாநி­லத்­தில் உள்ள பாடாங் பெசா­ரின் நாடாளு­ மன்ற உறுப்­பி­ன­ராக ஸாஹிடி இருந்து வந்­துள்­ளார்.

ஆனால் நவம்­பர் 19ஆம் தேதி நடை­பெற்ற தேர்­த­லில் சுயேச்­சை­யாக போட்­டி­யிட்ட அவர் தோல்வி யைத் தழுவினார்.

"அம்­னோ­வில் உள்ள பலர் பிகே­ஆர் கட்­சி­யில் எப்­படி சேர்வது என்பது பற்றி என்­னி­டம் கேட்­டுள்­ள­னர். இவர்­களில் உச்­ச­மன்­றத்­தைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களும் அடங்குவர்," என்று ஸாஹிடி கூறி­ய­தாக சினார் ஹரி­யான் குறிப்­பிட்­டது.

அம்னோ தலை­வர் ஸாஹிட் ஹமி­டி­யும் உச்­ச­மன்­ற­மும் உரிய நடை­மு­றை­யைப் பின்­பற்­றா­மல் பலரை நீக்­கி­யது, இடை­நீக்­கம் செய்­தது கட்­சித் தலை­வர்­கள், அடி­மட்­டத் தொண்­டர்­க­ளிடையே அதி­ருப்­தியை ஏற்­படுத்தி உள்ளது என்றார் அவர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்று முன்­னாள் சுகா­தார அமைச்­சரான கைரி ஜமா­லு­தீனை கட்­சி­யி­லி­ருந்து அம்னோ நீக்­கி­யது. முன்­னாள் தற்­காப்பு அமைச்­சர் ஹிஷா­மு­தீன் உசேன் உட்­பட பல உறுப்­பி­னர்­கள் ஆறு ஆண்­டு­களுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

தற்போதைய மலே­சி­ய துணைப் பிர­த­ம­ரான ஸாஹிட், தன்­னு­டன் ஒத்­துப்­போ­காத தலை­வர்­களை நீக்கியிருப்பதாக திரு ஸாஹிடி விமர்­சித்துள்ளார்.

"நல்லவேளை, நம் நாட்டில் உள்ள நீதிபதிகளை ஸாஹிட் தொட முடியாது. இல்லையென்றால் அவர்களையும் பதவியிலிருந்து அவர் நீக்கியிருப்பார்," என்று திரு ஸாஹிடி சொன்னார்.

ஆனால் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் உடனடியாக பிகேஆர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா என்பது தெரியவில்லை.

ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம்பெற்ற கட்சி களின் கருத்துகளை அறிந்து விலக்கப்பட்ட அம்னோ தலைவர் களை சேர்த்துக்கொள்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் கூறியிருப்பதாக பெர்னாமா தெரிவிக்கிறது.

தற்போதைய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளிடையே ஒத்துழைப்பைக் கட்டிக்காக்கும் நோக்கத்தில் பிகேஆர் இவ்வாறு முடிவு செய்துள்ளதாகத் தெரி கிறது.