லண்டன்: பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன்னைக் குறி வைத்து ஏவுகணை பாய்ச்சப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மிரட்டியதாகக் கூறியுள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால் கிரம்ளின் இதனை மறுத்துள்ளது.

