கோத்தா கினபாலு: சாபாவின் செம்போர்னா மாவட்டத்தில் உள்ள புலாவ் பாபாபேக்கில் மரப்படகு கவிழ்ந்ததில் கடலில் இருபது மாணவர்கள் விழுந்து விட்டனர்.
அவர்களை ஆசிரியர்கள் மீட்டுக் கரை சேர்த்தனர்.
திங்கள் மாலை 7.00 மணியளவில் மாணவர்களை ஆசிரியர்கள் மீட்பதை சமூக ஊடங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் காட்டின.
இந்தச் சம்பவத்தால் பிள்ளைகள் அதிர்ச்சி அடைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று செம்போர்னா அம்னோ பிரிவுத் தலைவர் தெரிவித்தார்.

