பிரதமராக விரும்பும் கைரி ஜமாலுதீன்

பிரதமராக விரும்பும் கைரி ஜமாலுதீன்

1 mins read
5c8ddf41-e416-4be5-afa4-ab8709c8fc9a
கடந்த 23 ஆண்­டு­க­ளாக அம்­னோ­வில் இருந்த கைரி, ஒருநாள் நாட்டை வழி நடத்த விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் ஆகப்­பெ­ரிய கட்­சி­யான அம்­னோ­வி­லி­ருந்து நீக்­கப்­பட்ட முன்­னாள் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன், தாம் ஒரு நாள் நாட்­டின் பிர­த­ம­ராக முடி­யும் என்று நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

அம்னோ முன்­னாள் இளை­யர் பிரி­வுத் தலை­வ­ரான அவரை, கட்­சிக் கட்­டுப்­பா­டு­களை மீறி­ய­தா­கச் சொல்லி அம்னோ தலைமை நீக்­கி­யது.

கடந்த 23 ஆண்­டு­க­ளாக அம்­னோ­வில் இருந்த கைரி, ஒருநாள் நாட்டை வழி நடத்த விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார். "அது எப்­படி நடக்­கும் என்­பதை இப்­போது என்­னால் உறு­தி­யா­கச் சொல்ல முடி­யாது. மக்­கள் பின்­பற்­று­வ­தற்கு பல பாதை­கள் இருக்­கின்­றன. ஆனால் நான் நாட்டை வழி நடத்த விரும்பு கிறேன்," என்று கைரி கூறி­னார். கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டதை எதிர்த்து மேல் முறை­யீடு செய்­யப்­போ­தில்லை என்றும் அவர் கூறி­யுள்­ளார்.

"முன்­னாள் தற்­காப்பு அமைச் சரான ஹிஷா­மு­தீன் உசேன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருப்­ப­தால் அவர் கட்­சியி லிருந்து நீக்­கப்­ப­ட­வில்லை. இல்லையென்­றால் அவ­ரும் விலக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்," என்று கைரி மேலும் தெரி­வித்­தார்.

அம்ேனா­வின் முன்­னாள் உத­வித் தலை­வ­ரான ஹிஷா­மு­தீன் உேசன் உட்­பட பல கட்சி உறுப் பினர்­கள் ஆறு ஆண்­டு­க­ளுக்கு அதி­ர­டி­யாக இைட நீக்­கம் ெசய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இத­னால் அம்னோ கட்­சித் தொண்­டர்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.