மலேசிய கடன் படிப்படியாகக் குறைக்கப்படும்: அன்வார்

மலேசிய கடன் படிப்படியாகக் குறைக்கப்படும்: அன்வார்

1 mins read
d875cb69-fddf-46d0-aa6a-6441470b8f61
மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், ஏழை­ களைப் பாதிக்­கும் வரி­களை உயர்த்­தா­மல் நாட்­டின் கடன் படிப்­ப­டி­யா­கக் குறைப்பதற்கான நட­வ­டிக்­கை­களை தனது அர­சாங்­கம் எடுக்கும் என்று கூறி­யுள்­ளார். படம்: இபிஏ -

சிங்­கப்­பூர்: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், ஏழை­ களைப் பாதிக்­கும் வரி­களை உயர்த்­தா­மல் நாட்­டின் கடன் படிப்­ப­டி­யா­கக் குறைப்பதற்கான நட­வ­டிக்­கை­களை தனது அர­சாங்­கம் எடுக்கும் என்று கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை அளித்துள்ள அவர், நேற்று புளூம்­பர்க் தொலைக்­காட்­சிக்கு பேட்­டி­ய­ளித்­தார்.

"நாங்­கள் கடன் உச்­ச ­வ­ரம்­பைத் தொட்­டு­விட்­டோம். இனி இதைப் படிப்­ப­டி­யாக குறைத் தாக வேண்­டும். இல்­லை­யெ­னில் அடுத்த தலைமுறைக்கு இது பொறுப்­பற்ற செய­லா­கி­ வி­டும்," என்­றார் அவர்.

கொள்­ளை­நோய் பர­வலின் தொடக்­க­கா­லத்­தில் மலே­சி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் கடன் வரம்பு 2020ல் 55 விழுக்­காட்­டி­லி­ருந்து 60 விழுக்­கா­டாக உயர்த்­தப்­பட்­டது. 2021ல் கூடு­தல் கடன் வாங்­கு ­வ­தற்­கும் பொரு­ளி­ய­லைத் தூண்­டு­வ­தற்­கான நிதி­யைப் பெற­வும் அந்த உச்­ச­வ­ரம்பு 65$க்கு அதி­க­ரிக்­கப்­பட்­டது.

மலே­சி­யா­வின் கடன் உச்ச ­வ­ரம்பு தற்­போது மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 61 விழுக்­கா­டாக உள்­ளது. கடன் உச்­ச ­வ­ரம்பை உயர்த்­து­வதை அனு­ம­திக்­கும் சட்­ட­ம் டிசம்­பர் 31ஆம் தேதியோடு­ கால­ாவ­தி­யா­னது.

கடன் அமைப்­பு­க­ளான மூடிஸ் இன்­வெஸ்­டர் சர்­வீ­சஸ் மற்­றும் எஸ்­அண்ட்பி குளோ­பல் ரேட்­டிங்ஸ், மலே­சி­யாவை 'ஏ' நிலை­யில் வைத்­துள்­ளன. அதே சம­யத்­தில் மலே­சிய அர­சாங்­கம் கடன் விகி­தத்­தைக் குறைப்­பது ஃபிட்ச் ரேட்­டிங்ஸ் அமைப்­பின் சிறந்த வகையிலான கடன் புள்ளி­க­ளைப் பெறு­வ­தற்கு மிக முக்­கி­யம். இந்த நிலை­யில் நிதி அமைச்­ச­ரு­மான அன்­வார் இப்­ரா­கிம், 2023ஆம் ஆண்­டின் திருத்­தப்­பட்ட வரவுசெல­வுத் திட்­டத்தை பிப்­ர­வரி 24ஆம் தேதி தாக்­கல் செய்­ய­வுள்­ளார். இதில் கடனை குறைக்­கும் அறி­விப்­பு­கள் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.