ஹன்ட்: சவால்களில் மூழ்கி வாய்ப்புகளை மறந்துவிடாதீர்

ஹன்ட்: சவால்களில் மூழ்கி வாய்ப்புகளை மறந்துவிடாதீர்

2 mins read
78499665-e42e-4592-bf03-effdacada480
-

லண்­டன்: ஜி7 நாடு­களில்

பிரிட்­டன் மட்­டுமே இவ்­வாண்­டில் பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யால் பாதிக்­கப்­படும் என்று அனைத்

­து­லகப் பண நிதி­யம் தெரி­வித்­துள்­ளது.

ஜி7 நாடு­களில் பிரிட்­ட­னின் பொரு­ளி­யல் மட்­டுமே இவ்­வாண்டு 0.6 விழுக்காடு சரிவு காணும் என்று அது கூறி­யது.

இதற்கு முன்பு பிரிட்­ட­னின் பொரு­ளி­யல் 0.9 விழுக்காடு சுருங்­கும் எனக் கடந்த அக்­டோ­பர் மாதத்­தில் நிதி­யம் முன்­

னு­ரைத்­தி­ருந்­தது. வட்டி விகித அதி­க­ரிப்பு, கூடு­தல் வரி, அர­சாங்­கத்­தின் செல­வி­னக் குறைப்­புத் திட்­டம் ஆகி­ய­வற்­றால் பிரிட்­ட­னில் வாழ்க்­கைச் செல­வி­னம் கட்­டுக்­க­டங்­கா­மல் உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிரிட்­டிஷ் பிர­த­மர் ரிஷி சுனக்­கின் அர­சாங்­கம் எதிர்­கொள்­ளும் சவால்­களை இவை தெள்­ளத் தெளி­வா­கக் காட்­டு­கின்­றன.

இருப்­பி­னும், அனைத்­து­ல­கப் பண நிதி­யம் கூறும் அள­வுக்கு பிரிட்­ட­னின் பொரு­ளி­யல் நிலை மோச­மாக இருக்­காது என்று அந்­நாட்­டின் நிதி அமைச்­சர் ஜெரமி ஹன்ட் தெரி­வித்­துள்ளார்.

"அனைத்­து­ல­கப் பண நிதி­யம் முன்­னு­ரைத்­தது போல பிரிட்­ட­னில் ஏற்­படும் பொரு­ளி­யல் மந்­த­நிலை மோச­மாக இருக்­காது என்று இங்­கி­லாந்து வங்கி அண்­மை­யில் தெரி­வித்­துள்­ளது.

"கிட்­டத்­தட்ட அனைத்­துப் பணக்­கார நாடு­க­ளின் பொரு­ளி­

ய­லுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் கார­ணங்­கள் பிரிட்­ட­னுக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். இதி­

லி­ருந்து முழு­மை­யா­கத் தப்­பிக்க முடி­யாது. இருப்­பி­னும், இத்­

த­கைய குறு­கியகால சவால்­

க­ளைக் கண்டு நீண்டகால

வாய்ப்­பு­களை மறந்­து­வி­டக்­

கூ­டாது," என்று திரு ஹன்ட் கூறினார்.

பிரிட்டனின் பொருளியல் 2024ஆம் ஆண்டில் மெதுவாக மீண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளியல் வளர்ச்சி அடிப்படையில் ஜி7 நாடுகள் பட்டியலில் ஆகக் கடைசியில் இருக்கும் ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஈடாக பிரிட்டனின் பொருளியல் வளர்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னுரைப்பு உண்மையானால் கொவிட்-19 நெருக்கடிநிலையைக் கணக்கில் சேர்க்காமல் 2009ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு இதுவே பிரிட்டனில் ஏற்படும் முதல் பொருளியல் மந்தநிலையாகும்.

அவ்வாறு நேர்ந்தால் இவ்வாண்டிலிருந்து பொதுத் தேர்தல் நடக்கும் வரை பிரிட்டிஷ் பொருளியல் வெறும் 0.3 விழுக்காடு வளர்ச்சி காணும்.

இந்நிலையில், மற்ற ஜி7 நாடுகளின் பொருளியல் குறித்து முன்வைக்கப்பட்ட முன்னுரைப்பை அனைத்துலகப் பண நிதியம் குறைக்கவில்லை.