பாரிஸ்: ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து பிரான்சில் நேற்று இரண்டாவது முறையாக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்த பிரெஞ்சு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இதற்கு எதிராக அந்நாட்டில் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
இதனை முன்னிட்டு பிரான்சில் உள்ள தொழிற்சங்கங்கள் நாடெங்கும் பல இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்
களுக்கு ஏற்பாடு செய்தன.
அவற்றில் ஆயிரக்கணக்
கானோர் ஈடுபட்டனர். நேற்று நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பிரான்சில் மின்சார உற்பத்தி, பொதுப் போக்குவரத்து, பள்ளிகள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்
பட்டன.
அதுமட்டுமல்லாது, தலைநகர் பாரிசில் ரயில் சேவை தடை
பட்டது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் பாதி பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள், ஊடகத்துறை ஊழியர்கள் உட்பட மற்ற பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு முன்பு இம்மாதம் 19ஆம் தேதியன்று ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரெஞ்சு அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டம் நியாயமற்றது என்றும் அது பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரெஞ்சு அரசு ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் தெரிவித்தது.