தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரான்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

1 mins read
482fa983-ccdd-48cf-8fab-a33a9a44ba69
-

பாரிஸ்: ஓய்­வூ­திய சீர்­தி­ருத்­தத்தை எதிர்த்து பிரான்­சில் நேற்று இரண்­டா­வது முறை­யாக நாடு தழு­விய வேலை நிறுத்­தப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது.

ஓய்­வு­பெ­றும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்த பிரெஞ்சு அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது. இதற்கு எதிராக அந்­நாட்­டில் அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்­ளன.

இதனை முன்­னிட்டு பிரான்­சில் உள்ள தொழிற்­சங்­கங்­கள் நாடெங்­கும் பல இடங்­களில் வேலை நிறுத்­தப் போராட்­டங்­

க­ளுக்கு ஏற்­பாடு செய்­தன.

அவற்­றில் ஆயி­ரக்­க­ணக்­

கா­னோர் ஈடு­பட்­ட­னர். நேற்று நடத்­தப்­பட்ட வேலை நிறுத்­தப் போராட்­டம் கார­ண­மாக பிரான்­சில் மின்­சார உற்­பத்தி, பொதுப் போக்­கு­வ­ரத்து, பள்­ளி­கள் ஆகி­யவை வெகு­வா­கப் பாதிக்­கப்­

பட்­டன.

அது­மட்­டு­மல்­லாது, தலை­ந­கர் பாரி­சில் ரயில் சேவை தடை­

பட்­டது. தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர்­களில் பாதி பேர் வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஊழி­யர்­கள், ஊட­கத்­துறை ஊழி­யர்­கள் உட்­பட மற்ற பல துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­களும் போராட்­டத்­தில் இறங்­கி­னர். இதற்கு முன்பு இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று ஒரு மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்­டோர் வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பிரெஞ்சு அர­சாங்­கத்­தின் ஓய்­வூ­திய சீர்­தி­ருத்த திட்­டம் நியா­ய­மற்­றது என்­றும் அது பல கடு­மை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­றும் பிரெஞ்சு அரசு ஊழி­யர்­க­ளுக்­கான தொழிற்­சங்­கம் தெரி­வித்­தது.