'அன்வார் மகளின் ஆலோசகர் பதவியில் தவறேதும் இல்லை'

'அன்வார் மகளின் ஆலோசகர் பதவியில் தவறேதும் இல்லை'

1 mins read
c6cfb40c-d58e-4591-a24b-0e1c424fd0aa
தமக்கு யார் ஆலோ­ச­க­ராக இருக்க வேண்­டும் என்­பதை முடி­வெ­டுக்க பிர­த­ம­ருக்கு அனைத்து உரி­மை­களும் இருப்­ப­தாக மலே­சி­யப் பிர­த­மர் அன்வார் கூறி­னார். படம்: த ஸ்டார் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வா­ரின் பொரு­ளி­யல், நிதி மூத்த ஆலோ­ச­க­ராக அவ­ரது மகள் நூருல் இஸா கடந்த மாதம் 3ஆம் தேதி நிய­மிக்­கப்­பட்­ட­தில் தவ­றே­தும் இல்லை என்று அவ­ரது அர­சி­யல் உத­வி­யா­ளர் அமிர் எச். கஸாலி தெரி­வித்­துள்­ளார்.

இது தகுதி இல்­லாத நிலை­யில் சொந்­த­பந்­தங்­க­ளுக்­குப் பதவி கொடுப்­ப­தற்கு ஈடா­காது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தமக்கு யார் ஆலோ­ச­க­ராக இருக்க வேண்­டும் என்­பதை முடி­வெ­டுக்க பிர­த­ம­ருக்கு அனைத்து உரி­மை­களும் இருப்­ப­தாக அவர் கூறி­னார். திட்­டங்­கள், ஏலக்­குத்­த­கை­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஒப்­பு­தல் அளிக்­கும் அதி­கா­ரம் உள்ள தலைமை நிர்­வாக­யா­கவோ

தலை­வ­ரா­கவோ திரு­வாட்­டி நூருல் இஸா பதவி வகிக்­க­வில்லை என்­பதை திரு அமீர் சுட்­டி­னார். பிர­த­ம­ரின் பொரு­ளி­யல், நிதி மூத்த ஆலோ­ச­க­ராக திரு­வாட்டி நூருல் இஸா நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து அவர் அந்­தப் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும் என்று பெரிக்­காத்­தான் நேஷனல் தலை­வர் முகை­தீன் யாசின் உட்­பட பல அர­சி­யல் கட்­சி­யி­னர் கூறி வரு­கின்­ற­னர். அது­மட்­டு­மல்­லா­மல், நிதி அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து அன்­வார் விலக வேண்­டும் என்றும்

முகை­தீன் கூறி­னார்.