ஹனோய்: வியட்னாமின் வடக்குப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்நாட்டின் ஆகாயப் படை விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி ஒருவர் மரணம் அடைந்தார்.
விழுந்து நொறுங்கிய விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுக்கோய் எஸ்யு-22 ரக விமானம் என்று வியட்னாமிய ராணுவம் தெரிவித்தது.
மலைகளுக்கு மிக அருகில் இருந்த ராணுவ விமான நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நடக்கக்கூடாதது நடக்கப்போகிறது என்று தெரிந்ததும் வான்குடையைப் பயன்படுத்தி விமானத்திலிருந்து வெளியேறிவிடுமாறு விமானிக்கு உத்தரவிடப்பட்டதாக வியட்னாமிய ராணுவம் தெரிவித்தது.
ஆனால் அதை அவர் செவிமடுக்காமல் விமானத்தை எப்படியாவது காப்பாற்ற முயன்றதாக அறியப்படுகிறது.
விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

