பெர்லின்: தோற்றத்தில் தம்மைப் போல ஒரே மாதிரியான சாயலைக் கொண்ட ஒரு பெண்ணை ஈராக்கிய வம்சாவளிப் பெண் ஒருவர் கொன்றதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது.
குடும்பப் பிரச்சினை காரணமாக தலைமறைவாகத் திட்டமிட்ட 23 வயது ஷரபான் கே, தாம் மரணமடைந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைக்க அவ்வாறு செய்ததாகக் கூறப்
படுகிறது. அதற்காகவே, உருவ ஒற்றுமை உள்ள பெண்ணை சமூக வளைத்தளம் மூலம்
அழகுக்கலை நிபுணரான ஷரபான் தேடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அழகுசாதனப் பொருள்
களைத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாகக் கூறி ஷரபான் செய்த விளம்பரத்தை நம்பி அல்ஜீரியரான 23 வயது கதிஜா ஓ அவரைச் சந்தித்தார். கதிஜாவை ஷரபானும் அவ
ருடன் இருந்த ஆடவரும் காரில் ஏற்றிக்கொண்டு வனப்
பகுதிக்குக் கொண்டு சென்று அவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்
படுகிறது. கதிஜாவின் உடலில் 50 கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன.
அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சேதப்
படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மரபணுச் சோதனை மூலம் ஷரபானின் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. ஷரபானுக்கும் அவருடன் இருந்த ஆடவருக்கும் எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

