அம்னோ உதவித் தலைவர் பதவிகளுக்குக் கடும் போட்டி; களமிறங்கும் கட்சி ஜாம்பவான்கள்

2 mins read
07daf7c0-2b57-495e-a04c-b5c5b10a8f33
மலே­சி­யா­வின் ஆகப் பழ­மை­யான கட்­சி­யான அம்னோ அண்­மை­யில் சில முக்­கிய அர­சி­யல்­வா­தி­களைப் பதவி நீக்­கம், இடை­நீக்­கம் செய்­தது. படம்: ஸாஹிட் ஹமிடியின் ஃபேஸ்புக் பக்கம் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் ஆகப் பழ­மை­யான கட்­சி­யான அம்னோ அண்­மை­யில் சில முக்­கிய அர­சி­யல்­வா­தி­களைப் பதவி நீக்­கம், இடை­நீக்­கம் செய்­தது.

இந்­நி­லை­யில், அம்­னோ­வின் கட்­சித் தேர்­தல் வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி­யன்று நடை­பெற இருக்­கிறது.

தேர்­தல் நெருங்­கு­கை­யில், கட்­சி­யின் உத­வித் தலைவர்

பத­வி­க­ளுக்­குக் கடு­மை­யான போட்டி நில­வும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் நடை­பெற்ற அம்னோ பொதுக்­கூட்­டத்­தில் கட்­சித் தலை­வர், துணைத் தலை­வர் ஆகிய பத­வி­க­ளுக்­குத் தேர்­தல் நடத்­தப்­ப­டாது என்று தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இதன் விளை­வாக, கட்­சித் தலை­வ­ராக அக­மது ஸாஹிட் ஹமி­டி­யும் துணைத் தலை­வ­ராக முகம்­மது ஹசா­னும் நீடிப்­பர்.

கடந்த பொதுத் தேர்­த­லில் அம்னோ தோல்வி அடைந்­த­

போ­தி­லும் ஆளும் கூட்­ட­ணி­யில் இடம்­பெ­று­ள்ளது.

தமது தேர்­தல் வியூ­கம் சரி­யா­னதே என்று இன்­றும் திரு ஸாஹிட் கூறி வரு­கி­றார். தொடர்ந்து கட்­சித் தலை­வ­ராக இருந்து அடுத்த பொதுத் தேர்­த­லில் இளம் வாக்­கா­ளர்­களை ஈர்க்­கப்­போ­வ­தாக அவர் சூளு­ரைத்­துள்­ளார்.

இதற்­கி­டையே, மூன்று உத­வித் தலை­வர் பத­வி­க­ளுக்­குக் குறைந்­தது ஏழு பேர் போட்­டி­

யி­டக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது. அவர்­களில் அம்னோ உச்­ச­மன்ற உறுப்­பி­னர்­கள் டாக்­டர் ஸாம்­பிரி அப்­துல் காதர், திரு­வாட்டி அஸா­லினா ஓத்­மான் சயீது, திரு ஜொஹாரி அப்­துல் கனி ஆகி­யோர் அடங்­கு­வர்.

டாக்­டர் ஸாம்­பிரி மலே­சி­யா­வின் தற்­போ­தைய வெளி­யு­றவு அமைச்­சர்.

திரு­வாட்டி அஸா­லினா சட்ட, அமைப்பு ரீதி­யான சீர்­தி­ருத்த அமைச்­ச­ரா­வார்.

இவர்­க­ளு­டன் உத­வித் தலை­வர் பத­விக்குத் தற்­போது அப்­

ப­த­வியை வகிக்­கும் திரு முகம்­மது காலித் நூர்­தீன், அம்னோ இளை­யர் அணித் தலை­வர் அஸி­ரஃப் வஜ்டி டுசுக்கி, முன்­னாள் ஜோகூர் முதல்­வர் ஹஸ்னி முகம்­மது, சாபா அம்னோ தலை­வர் புங் மொக்­தார் ராடின் ஆகி­யோ­ரும் போட்­டி­யி­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.