மலேசியாவில் ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரி மீண்டும் கொண்டுவரப்படாது என்று அந்நாட்டு பிரதமரும், நிதி அமைச்சருமான அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு ஜனவரி 30ஆம் தேதியன்று வருகையளித்த திரு அன்வார், புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு போட்டியளித்தார். அந்தப் பேட்டியில் மலேசியாவின் பொருளியல் குறிப்பாக அந்நாட்டின் தேசிய கடன் பற்றி அவர் பேசினார்.
ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்துவது பற்றி திரு அன்வாரிடம் கேட்கப்பட்டது. வரியை உயர்த்த ஜிஎஸ்டி சிறந்த முறை என்று தான் கருதினாலும், பல மலேசியர்கள் ஏழ்மையில் தவிக்கும்போது பொருள், சேவை வரியை அதிகரிப்பது சாத்தியமில்லை என்றார் திரு அன்வார்.
மலேசியர்களின் சம்பளம் உயரும்போது ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்துவது பற்றி யோசிக்கலாம் என்றார் திரு அன்வார். ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்தும்போது, வசதி குறைந்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்றார் திரு அன்வார்.

