ஹாங்­காங்: பய­ணி­களை ஈர்க்க 50,000 இல­வ­சப் பய­ணங்­கள்

1 mins read
03c4dee6-aa04-42e4-bcaf-4ff666318c65
ஹாங்­காங்: மூன்­றாண்­டு­க­ளாக கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளுக்­குப் பிறகு, வரு­கை­யா­ளர்­கள், வர்த்­த­கங்­கள், முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்க நிதி மைய­மாக விளங்­கும் ஹாங்­காங் 50,00 இல­வ­சப் பய­ணங்­களை அள்ளி வீசு­கிறது. படம்: இபிஏ -

ஹாங்­காங்: மூன்­றாண்­டு­க­ளாக கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளுக்­குப் பிறகு, வரு­கை­யா­ளர்­கள், வர்த்­த­கங்­கள், முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்க நிதி மைய­மாக விளங்­கும் ஹாங்­காங் 50,00 இல­வ­சப் பய­ணங்­களை அள்ளி வீசு­கிறது.

இதை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் வித­மாக அந்­ந­க­ரில் மாநா­டு­கள் நடக்­கும் மையப் பகு­தி­யில், நக­ரின் பிர­ப­ல­மான துறை­மு­கத்­துக்கு அரு­கில், 'ஹலோ ஹாங்­காங்' என்ற இயக்­கத்தை வண்ண ஒளி­வி­ளக்­கு­கள் மிளிர நட­ன­ம­ணி­கள் பாடி, ஆடி தொடங்கி வைத்­த­னர். இந்த நிகழ்ச்­சிக்­குப் பின்­ன­ணி­யில், பய­ணி­களை வர­வேற்­கும் வாச­கங்­கள் ரஷ்ய, ஸ்பா­னிய உட்­பட பல மொழி­களில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.