நியூகாசல்-மேன்யூ இறுதி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு இல்லை
சிங்கப்பூர்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டும் மான்செஸ்டர் யுனைடெட்டும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இம்மாதம் 26ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த ஆட்டம் சிங்கப்பூரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உள்ளூர் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
இந்த ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யப்போவதில்லை என்று ஸ்டார்ஹப், சிங்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் நேற்று உறுதி செய்தன.
2026 உலகக் கிண்ணப் போட்டியில் மெஸ்ஸி களமிறங்கக்கூடும்
பியூனோஸ் ஐரிஸ்: அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா மகுடம் சூடியது. அணித் தலைவர் என்கிற முறையில் லயனல் மெஸ்ஸி கிண்ணத்தை ஏந்தினார். அதுவே அவரது இறுதி உலகக் கிண்ணப் போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் களமிறங்குவது குறித்து தாம் பரிசீலித்து வருவதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்த எம்பாப்பேக்கு களமிறங்க முடியாத நிலை
பாரிஸ்: பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பேவுக்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் 14ஆம் தேதியன்று பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிராக நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் எம்பாப்பேயால் களமிறங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

