வாஷிங்டன்: தைவான் தொடர்பாக சீன அதிபர் ஸி ஜின்பிங் கொண்டுள்ள இலட்சியங்கள், திட்டங்கள் ஆகியவற்றை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை பிரிவின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள பின்
னடைவுகளைப் பார்த்து போர் தொடுத்து வேறொரு நாட்டைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பது அதிபர் ஸிக்குப் புரிந்திருக்கும் என்றார் அவர்.
2027ஆம் ஆண்டுக்குள் தைவானைக் கைப்பற்ற அதிபர் ஸி திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத் தயாராக இருக்கும்படி தமது ராணுவத்துக்கு உத்தர
விட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக திரு பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். இது அதிபர் ஸியின் இலட்சியத்தைத் தெளிவாகக் காட்டுவதாக அவர் கூறினார்.
இதுகுறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார் திரு பர்ன்ஸ்.
உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக சீனா எவ்வித கருத்து
களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்த ஆறு மாதங்கள் உக்ரேனுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் என்றும் அது எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் போரில் வெற்றி பெறுபவரை நிர்ணயிக்கும் என்றும் திரு பர்ன்ஸ் கூறினார்.

