சிறுவர்களை மோதித் தள்ளிய ரயில், ஒருவர் பலி

சிறுவர்களை மோதித் தள்ளிய ரயில், ஒருவர் பலி

1 mins read
12375761-be63-4e5a-906d-5cc796d9c9c2
-

பெர்­லின்: ஜெர்­ம­னி­யின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள நக­ரம் ஒன்­றில் ரயில் ஒன்று மோதித் தள்­ளி­ய­தில் சிறு­வர் ஒரு­வர் மாண்­டார். இன்­னொரு சிறு­வ­ருக்­குக் கடு­மை­யான காயங்­கள் ஏற்­பட்­டன.

பல சிறு­வர்­கள் மீது அந்த ரயில் மோதி அவர்­களை இழுத்­துச் சென்­ற­தாக ஜெர்­மன் காவல்­துறை தெரி­வித்­தது. ஆனால் இது­கு­றித்து அது கூடு­தல் விவ­ரங்­களை வெளி­யி­ட­வில்லை. சிறு­வர்­களை அந்த சரக்கு ரயில் பல நூறு மீட்­டர் தூரத்­துக்கு இழுத்­துச் சென்­ற­தாக ஜெர்­மன் ஊட­கம் தெரி­வித்­தது. இந்­தச் சம்­ப­வம் எவ்­வாறு நடந்­தது என்று இன்­னும் தெரி­ய­வில்லை.