பெட்டாலிங் ஜெயா: மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த ஓராண்டுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும்போது கழுத்துப் பட்டை (டை) அணியத் தேவையில்லை. இந்த விதிமுறை இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது.
நாடாளுமன்ற நாயகராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜொஹாரி அப்துல் நாடாளு
மன்றத்தின் செயல்முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயன்று வருகிறார். அதன்படி இந்தப் புதிய நடைமுறை அறி
முகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று, மலேசிய நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்கள் சிறப்பு அமர்வு நடைபெற்றது.
இரண்டாவது நாள் அமர்வுக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்துப் பட்டை அணிவது கட்டாயமல்ல என்று திரு ஜொஹாரி அப்போது தெரிவித்திருந்தார்.
அதன்படி டிசம்பர் 20ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்துப் பட்டை அணியவில்லை.
அவர்களில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் ஒருவர். மலேசியாவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்துப் பட்டை அணியாமல் நாடாளு
மன்றத்துக்குச் சென்றது அதுவே முதல்முறை.

