சர்ச்சையை ஏற்படுத்திய நிர்வாணம்

சர்ச்சையை ஏற்படுத்திய நிர்வாணம்

1 mins read
30fd9ece-096e-49bb-802e-8ca2821baadc
-

மட்ரிட்: ஸ்பெ­யி­னில் ஆட­வர் ஒரு­வர் பொது இடத்­தில் நிர்­வா­ண­மாக நடந்­த­தற்­காக அவ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அவ­ருக்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தத்தை எதிர்த்து அந்­நாட்டு உயர்­நீ­தி­மன்­றம் தீர்ப்பு அளித்­துள்­ளது.

29 வய­தான ஆட­வர் வெலன்­சியா நக­ரில் வெறும் கால­ணி­கள் மட்­டும் அணிந்து கொண்டு நடந்­துள்­ளார். தன்­னு­டைய கொள்­கை­களைப் பின்­பற்றி தான் நடப்­ப­தால் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது நியா­யம் இல்லை என்­பது அந்த ஆட­வ­ரின் வாதம்.

2020லிருந்து தான் ஆடை­கள் இல்­லா­மல் பிறந்த மேனியாக பொது இடங்­க­ளுக்­குச் செல்­வ­தாக அவர் கூறு­கி­றார்.

ஸ்பெ­யி­னில் பொது இடங்­களில் நிர்­வா­ண­மாக இருப்­ப­தற்குச் சட்­டப்­படி அனு­மதி உண்டு. 1988ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்தச் சட்­டம் நடை­மு­றை­யில் உள்­ளது. ஆனால் சில மாநி­லங்­களில் கடற்­க­ரை­க­ளைத் தவிர மற்ற பொது இடங்­களில் நிர்­வா­ண­மாக இருப்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.