காரணம் தெரியாமல் குழம்பும் மகாதீர்

காரணம் தெரியாமல் குழம்பும் மகாதீர்

1 mins read
a8831efb-9c74-496f-aee0-bbdb894b7baf
98 வயது டாக்­டர் மகா­தீர், 1969ஆம் ஆண்டுத் தேர்­த­லில் தோற்ற பின்­னர் சென்ற ஆண்டு முதல்­முறை­யாக தோல்வி கண்­டார். படம்: ராய்ட்டர்ஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் தாம் தோற்று சில மாதம் ஆன நிலை­யில், தமது தோல்­விக்­கான கார­ணம் தெரி­யா­மல் குழப்­பத்­தில் இருப்­ப­தாக முன்­னைய பிர­த­மர் மகா­தீர் முக­மது கூறி­யுள்­ளார்.

லங்­காவி தொகு­தி­யில் போட்­டி­யிட்ட டாக்­டர் மகா­தீர் வெறும் 4,566 வாக்­கு­கள் பெற்று வைப்­புத்­ தொகையை இழந்­தார். பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் சுஹாய்மி அப்­துல்லா 25,463 வாக்­கு­க­ளு­டன் வெற்றி பெற்­றார்.

98 வயது டாக்­டர் மகா­தீர், 1969ஆம் ஆண்டுத் தேர்­த­லில் தோற்ற பின்­னர் சென்ற ஆண்டு முதல்­முறை­யாக தோல்வி கண்­டார். தாம் 14,000 வாக்­கு­களை இழந்­தது ஏன் என்­ப­தும் என்ன தவறு செய்­தோம் என்­றும் தெரி­ய­வில்லை என்றும் டாக்­டர் மகா­தீர் நியூ ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறி­னார்.

லங்­கா­விக்­காக தாம் நிறைய செய்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.