கோலாலம்பூர்: மலேசியப் பொதுத் தேர்தலில் தாம் தோற்று சில மாதம் ஆன நிலையில், தமது தோல்விக்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக முன்னைய பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
லங்காவி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் மகாதீர் வெறும் 4,566 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழந்தார். பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் சுஹாய்மி அப்துல்லா 25,463 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
98 வயது டாக்டர் மகாதீர், 1969ஆம் ஆண்டுத் தேர்தலில் தோற்ற பின்னர் சென்ற ஆண்டு முதல்முறையாக தோல்வி கண்டார். தாம் 14,000 வாக்குகளை இழந்தது ஏன் என்பதும் என்ன தவறு செய்தோம் என்றும் தெரியவில்லை என்றும் டாக்டர் மகாதீர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
லங்காவிக்காக தாம் நிறைய செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

