மலேசியாவில் பல்லாயிரம் பேர் பக்தியுடன் கலந்துகொண்ட தைப்பூசத் திருவிழா தைப்பூசக் கோலாகலம்

பத்­து­மலை: கொவிட்-19 பர­வ­லின்­போது தொய்­வ­டைந்த தைப்­பூ­சத் திரு­விழா, மலே­சி­யா­வில் நேற்று பல்­லா­யி­ரம் பேர் பங்­கெ­டுக்க, கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டப்­பட்­டுள்­ளது.

சிறப்­பு­வாய்ந்த பத்­து­மலை ஸ்ரீ சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோவி­லில் இரண்டு நாள்­க­ளாக 150,000க்கும் மேற்­பட்ட பக்­தர்­கள் கலந்­து­கொண்­ட­­தாக கோவில் தலை­வர் பி. கண்­ண­தா­சன் தி ஸ்டார் நாளி­த­ழி­டம் கூறி­னார். பத்­து­மலை கோவி­லுக்கு செல்­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் உடல்­ந­லக் குறை­வால் செல்­ல­வில்லை.

திரு அன்­வார் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் இந்­துக்­ களுக்கு தம் தைப்­பூச வாழ்த்து களைப் பகிர்ந்­து­கொண்­டார். இந்து ஆல­யங்­க­ளின் நிர்­வா­கக் குழு­வி­னரை அவர் சந்­திக்க விரும்­பி­ய­தாக மனி­த­வள அமைச்­சர் வி. சிவ­கு­மார் தெரி­வித்­தார்.

ஜோகூ­ரின் ஸ்கூ­டா­யில் உள்ள அருள்­மிகு பால­சுப்­பிர மணி­யர் கோவி­லுக்கு ஜோகூர் சுல்­தான் இப்­ரா­கிம் இஸ்­மாயில் சென்­றார். ஜோகூர் புற்று நோய் அற­நிதிக்கு கோவில் நிர்­வா­கம் அளித்த 5,000 ரிங்­கிட் நன்­கொடை, வெள்­ளிக்­கு­டம் ஆகி­ய­வற்றை அவர் பெற்­றுக்­கொண்­டார்.

பினாங்கு தண்­ணீர்­மலை கோவில், ஈப்போ கல்­லு­மலை கோவில் உள்­ளிட்ட மற்ற முக்­கிய முரு­கன் கோயில்­க­ளி­லும் தைப்பூசத் திரு­விழா சிறப்பாக நடைபெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!