ஹாங்காங்: ஹாங்காங்கின் எல்லைகள் எந்தவித கொவிட்-19 கட்டுப்பாடுகள் இல்லாமல் நேற்று திறக்கப்பட்டன. இதனால் ஆயிரக் கணக்கானப் பயணிகள் சீனாவுக்கும் ஹாங்காங்கும் இடையே நேற்று பயணம் செய்தனர்.
இம்மாதம் 6ஆம் தேதியி லிருந்து ஹாங்காங்குடனான எல்லைகள் முழுமையாகத் திறக்கப்படும் என்று முன்னதாக சீனா அறிவித்திருந்தது.
கட்டாய கொவிட்-19 சோத னைகள், பயணிகளுக்கான வரம்புகள் அகற்றப்படும் என்று அது கூறியிருந்தது.
நேற்று நண்பகல் வரை ஏறக்குறைய 22,000 பயணிகள் லோ வூ சோதனை நிலையத்தைக் கடந்து சென்றனர் என்று ஹாங்காங் எம்டிஆர் கார்ப்பரேஷன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
"ரயிலிலிருந்து இறங்கி எல்லையைக் கடந்து சென்றது சிலிர்ப்பாக இருந்தது. பழைய காலத்திற்குச் செல்வதுபோல இருந்தது," என்று ஹாங்காங்கி லிருந்து சீனாவின் ஷென்ஸெனுக்குப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்டினா லி, 35, தெரிவித் தார்.
இதற்கிடையே தேசியப் பாதுகாப்பு தொடர்பில் ஆகப்பெரிய வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக 47 ஜனநாயக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு களை எதிர்நோக்குகின்றனர்.
பிரபலங்கள், சட்ட கல்வி மான்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வழக்கில் சிக்கியிருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

