இஸ்தான்புல்: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்
கானோர் மாண்டனர். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில், துருக்கிக்கும் சிரியாவுக்கும் ஆசிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பல ஆசிய நாடுகள் மீட்புப் பணி
யாளர்களையும் நிவாரணப் பொருள்களையும் அனுப்பி
வைக்கத் தொடங்கிவிட்டன.
துருக்கிக்கு 20 பேர் கொண்ட மீட்புப் பணிக் குழுவை சிங்கப்பூர் அனுப்புகிறது. இக்குழு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 'ஆப்பரேஷன் லயன்ஹார்ட்' பிரிவைச் சேர்ந்தது. இதில் மீட்புப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்
பட்டுள்ள பகுதிகளுக்கு 70
மீட்புப் பணி நிபுணர்களை மலேசியா அனுப்பிவைக்கிறது. அவர்களில் மலேசிய இயற்கைப் பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த அபாயகரமான ரசாயனங்களை எதிர்கொள்ளும் பிரிவின் அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர். ஜப்பானிலிருந்து 18 மீட்புப் பணியாளர்கள் துருக்கிக்குச் சென்றுள்ளனர். மொத்தம் 75
மீட்புப் பணியாளர்களை அனுப்பி வைக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. துருக்கிக்கு குறைந்தது எட்டு நிவாரணப் பணி நிபுணர்களை சீனா அனுப்பியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவிப்போரைக் கண்டுபிடிக்க உதவும் சாதனங்கள், மீட்புப் பணி
களுக்குத் தேவையான கருவிகள் முதலியவற்றை சீனா அனுப்பிவைத்துள்ளது.
துருக்கிக்கும் சிரியாவுக்கும் $7.8 மில்லியன் பெறுமானமுள்ள அவசரகால உதவித் திட்டத்தையும் சீனா வழங்குகிறது.
துருக்கிக்கு உதவ இந்தியாவும் முன்வந்துள்ளது. 100 மீட்புப் பணியாளர்களையும் இடிபாடு
களுக்கு அடியில் இருப்போரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்களையும் அது அனுப்பிவைத்துள்ளது.
100 மீட்புப் பணியாளர்களை தென்கொரியா அனுப்புகிறது. அத்துடன் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள நிவாரணப் பொருள்களையும் அது வழங்குகிறது. துருக்கிக்கும் சிரியாவுக்கும் உதவி வழங்கும் ஆசிய நாடுகள் பட்டியலில் பிலிப்பீன்சும் தைவானும் இடம்பெறுகின்றன.

